புது மழை
Monday, February 17, 2014
மழை மழை மட்டுமே.....
நேற்றிலிருந்து வானிலை மிகவும் அற்புதமாக இருந்து வந்தது. மென் காற்றும், இதமான வெயிலும் கவிதை எழுதும் மன நிலையை உருவாக்கித் தந்தது. ஆனாலும் எழுதவில்லை. தாளில் எழுதி முடித்தால் கவிதை உருப்பெற்று விடுமா என்ன? கவிதைக்கான மன நிலையில் இருப்பது கவிதை எழுதுவதை விடு அற்புதமான ஒன்று, எழுதி இறக்கி வைத்துவிட்டால் அக்கவிதையை அத்தருணத்தை பிரிய நேரிடும். இழப்பு என்றுமே கவிதைக்கல்ல. நேற்றைய கதை அது. இன்று காலை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு தோழி கார்த்திகாவை சந்திக்கக் கிளம்பிக் கொண்டிருந்தேன். மழை வர்ற மாதிரி இருக்கு, காயப்போட்ட துணிகளை எடுத்துட்டு வாம்மா என்ற அத்தையின் குரலுக்கு சரி என்றபடி தலைஎவாரிக் கொண்டிருந்தேன். ஜில்லென்ற காற்று ஜன்னலிலிருந்து முகத்தை வந்து தழுவ, உடனடியாக மொட்டை மாடிக்கு ஓடினேன். பாதி காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டிருக்கும் போதே முதல் மழைத் துளி என் மேல் விழுந்தது. அதற்குள் அத்தையும் வந்துவிட எல்லாத் துணிகளையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அங்கேயே நின்றேன். இப்போது மழை தூறலாகிவிட்டிருந்தது. "என்னடி" என்றார் அத்தை. "நீங்க போங்க இதோ வரேன்" என்றேன்.
அவர்கள் கீழே இறங்கிச் செல்வதற்கும் மழை வலுப்பெறுவதற்கும் சரியாக இருந்தது. எத்தனை நாளாயிற்று மழையில் நனைந்து என்று பரவசமானேன். பொழியும் மழையில் சிறு துரும்பாய் நனைய ஆரம்பித்தேன். மொட்டை மாடியிலிருந்து கீழே எட்டிப் பார்த்தேன். தெருவே ஒரு மெளனத் தவமிருந்தது. எதிர் வீட்டுக் கேட் அருகில் மூன்று கன்றுக் குட்டிகள் மழைக்கு ஒதுங்கி நின்றிருந்தது. அவற்றை அருகே அழைத்து தடவிக் கொடுக்கலாம் போலிருந்தது. பக்கத்து வீட்டில் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருக்கவே அதில் நீட்டிக் கொண்டிருந்த ஒரு கட்டையில், காக்கையொன்று மழைக்கு சிலிர்த்து தன் சிறகை ஒடுக்கியபடி அமர்ந்திருந்தது. மழை நன்றாக வலுக்க ஆரம்பித்தது. பார்வை பழையினூடே மங்கலாக ஆரம்பித்தது. இமை முழுவதும் நனைந்து கண்கள் மழையில் நீந்தின. உடல் தொப்பலாக நனைந்துவிட்டது. மனமும் கூடத்தான். வெகு நாள் கழித்து மழைக்கும் எனக்குமான ஆழமான நட்பு புதுப்பிக்கப்பட்டது என்று நினைத்து எனக்குள் சிரித்துக் கொண்டேன். இந்நொடியின் இந்த அழகான மழை நிச்சயம் எனக்கே எனக்கானது என்றுணர்ந்து பரவமானேன்.
மழை என்னை நனைக்க நனைக்க லேசாக குளிர ஆரம்பித்தது. தூரத்தில் தெரிந்த மெம்பாலத்தில் வண்டிகள் விரைந்து கொண்டிருந்தன. சற்று தூரத்தில் தெரிந்த ரயில் நிலையப் படிக்கட்டில் சிலர் மழைக்கு பயந்து தலையில் துணியைப் போட்டபடி விரைவாக ஏறியும் இறங்கியும் கொண்டிருந்தார்கள். இது பட்ரவாக்கம் எனும் ரயில் நிலையமா ப்ரான்சில் இருக்கும் ஏதோ ஒரு ரயில் நிலையமா என்று ஆச்சரியப்படும்படி, மழை அந்த இடத்தின் தடத்தையே ஒரு நொடியில் மாற்றி அமைத்துவிட்டது. அமைதியான அந்த ரயில் நிலையம் ஒரு உறைந்து போன சித்திரக் காட்சியாய் என்னில் இப்போழ்து நிலைத்து விட்டது. அதற்குள் கணவர் சரா ஒரு குடையுடன் மாடிக்கு விரைந்து வந்தார். மழைக்கு தயங்கி மொட்டை மாடியின் ஏதோ ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருப்பேன், மீட்டு அழைத்துச் செல்லலாம் என்று வந்தவருக்கு சிறிய அதிர்ச்சி. சொட்ட சொட்ட வெட்ட வெளியில் மழையில் நனைந்து தூரத்தில் பார்வை நிலைத்திருக்க, ஏதோ இவளுக்கு ஆகிவிட்டது என்று நினைத்து அழைத்தார். உன்னை அழைச்சிட்டுப் போகலாம்னு வந்தா நீ ரசிச்சிட்டு இருக்கே...சரி சரி எப்ப முடியுமோ அப்ப இறங்கி வா என்று வாழ்த்திவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். நான் நானாக இருக்க சராவும் முக்கிய காரணம். மழையில் நனைந்தாலும் சரி, பனியில் திளைத்தாலும் சரி உனக்குப் பிடிக்குதா அப்படியே இரு என்று பல சமயங்களில் விட்டுக் கொடுப்பவர். அதனால் தான் பதினான்கு வருடங்களாக அப்படியே புது மழையாக இருக்கிறது எங்களின் இந்தப் பிரியம்.
மழையின் அடர்த்தி இன்னும் சற்று அதிகரிக்க, நான் லேசாக நடுங்கத் தொடங்கினேன். முந்தைய இரவு சாப்பிட்ட ஐஸ்க்ரீம் இன்று காலை தான் வேலையைக் காட்ட ஆரம்பித்திருந்தது. இதில் மழையில் வேறு நனைந்தால் என்று புத்தி எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பிக்க, மனசு அதை உடனடியாக அடக்கிவிட்டது. ஐஸ் க்ரீமோ அடை மழையோ எனக்குப் பிடிக்கிறது. உடல் ஒரு கருவி தானே....புத்தி அதை சில சமயம் செலுத்தினாலும் மனசு விரும்பியதை செய்துக் கொள்ளத் தானே இந்த வாழ்வும் எல்லாமும். ஆன்மாவுடன் மழை உரையாட ஆரம்பித்ததை என்னை நானே தள்ளி நின்று வேடிக்கைப் பார்க்க்கு விந்தையும் நடந்தேறியது. இந்த மழைக்கு முடிவிருக்கக் கூடாது என்றே மனம் விழைந்தது. ஆனால் எல்லா பயணமும் சிறிது நேரம் மட்டுமே என்று தெரியாதவளா நானும். வானிலிருந்து கீழே இறங்கித் தானே ஆகவேண்டும். வாழ்க்க்கை கற்றுக் கொடுக்கும் அரிய பாடஙக்ளை அவ்வப்போது உள்ளம் திறந்து கேட்டுக் கொண்டிருப்பதால் தான் ரசனைகளுக்கும் அழகியலுக்கும் ஆன்ம வயமான வாழ்க்கையையும் வாழ்ந்து தீர்க்க முடிகிறது. இந்த மழை கனவில்லை. நிஜம் என் மீது பூப்பாவாய் பொழிந்து என்னை சிறு தெய்வமாக உணர வைத்த மழைக்கு கோடி வந்தனம். மழையிடம் மெல்லிய குரலில் நான் சொன்ன கவிதையை அது ஏற்றுக் கொண்டது. இதை விட இன்றைய நாளின் சிறப்பாக வேறு என்ன இருந்துவிட முடியும்?
மழை இப்போது சன்னமாகிவிட்டது. மீண்டும் தூறலாகி சற்றேறக் குறைய நிற்கும்படி ஆகவே, வீடு திரும்பினேன். சரா ரெடியாக ஒரு புது உடையும், டவலையும் எடுத்துத் தந்தார். இன்று மூன்று முறை குளித்தேன். காலையில், பின்னர் மழையில், அதன் பின் மழைக்குப் பின். இந்தக் கோடையை இப்படியே கடந்துவிடலாம் என்ற நம்பிக்கை வந்தது. அதைவிட வெம்மையான வாழ்க்கையும் தான். நம்பிக்கையில் தானே அடுத்த கட்ட நகர்வு இருக்கிறது.
இனிது இனிது நிச்சயம் வாழ்தல் இனிது.

Subscribe to:
Comments (Atom)